×

போர் சட்டங்களை மீறியதாக குற்றம் சாட்டிய ஐ.நா.பொதுச் செயலாளர் ஆண்டானியோ குட்டரஸ் மன்னிப்பு கேட்க வேண்டும் : இஸ்ரேல் பிடிவாதம்

வாஷிங்டன் : போர் சட்டங்களை மீறியதாக குற்றம் சாட்டிய ஐ.நா. பொதுச் செயலாளர் ஆண்டானியோ குட்டரஸ் மன்னிப்பு கேட்பதோடு, பதவியையும் ராஜினமா செய்ய வேண்டும் என்று இஸ்ரேல் வலியுறுத்தி உள்ளது. காசாவில் உள்ள ஹமாஸ் இயக்கத்தினரும் இஸ்ரேலிய படைகளும் உக்கிரமாக போர் புரிந்து வரக்கூடிய நிலையில், காசா நகரையே இஸ்ரேல் வான்படை உருக்குலைத்து வருகிறது. இதனால் ஐ.நாவின் பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் அவசர ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. காசாவில் அனைத்து சர்வதேச மனிதாபிமான சட்டங்களையும் இஸ்ரேல் மீறியுள்ளதாக ஐ.நா. பொதுச் செயலாளர் ஆண்டானியோ குட்டரஸ் குற்றம் சாட்டினார். இந்த கருத்தை அவர் வாபஸ் பெற்று மன்னிப்பு கோர வேண்டும் என்று இஸ்ரோ வலியுறுத்தி உள்ளது. மேலும் பொதுச் செயலாளர் பதவியை ஆண்டானியோ குட்டரஸ் ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் இஸ்ரேல் தெரிவித்துள்ளது. இதனிடையே தங்களது நோக்கம் நிறைவேறும் வரை போர் ஓயாது எனவும் இஸ்ரேல் குறிப்பிட்டுள்ளது.

இது தொடர்பாக இஸ்ரேல் ராணுவ செய்தித் தொடர்பாளர் டேனியல் ஹிகாரி பேசுகையில், “நாங்கள் தொடர்ந்து காசா நகரில் தாக்குதல் நடத்துவோம். இன்று காசா நகரில் பயங்கரவாதிகள் தங்கியுள்ள கட்டிடங்களின் கட்டமைப்பை தங்கினோம். நிலத்திற்க்கு கீழே பயங்கரவாதிகளின் கட்டமைப்புகளை தாக்கி அழித்தோம்.எங்களுடைய நோக்கம் நிறைவேறும் வரை தொடர்ந்து தாக்குதலை நடத்துவோம்,’என்றார். இதனிடையே அக் 7ம் தேதி இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய தாக்குதலுக்கு எதிராக அமெரிக்க கண்டனம் தீர்மானம் கொண்டு வந்தது. ஆனால் இதனை தங்களின் வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி ரஷ்யா, சீனா முறியடித்தது. அதைத் தொடர்ந்து காசா மீதான தாக்குதலை இஸ்ரேல் நிறுத்த வலியுறுத்தி ரஷ்யா கொண்டு வந்த தீர்மானத்தை அமெரிக்கா வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி முறியடித்தது.

The post போர் சட்டங்களை மீறியதாக குற்றம் சாட்டிய ஐ.நா.பொதுச் செயலாளர் ஆண்டானியோ குட்டரஸ் மன்னிப்பு கேட்க வேண்டும் : இஸ்ரேல் பிடிவாதம் appeared first on Dinakaran.

Tags : UN ,Secretary-General Antonio Guterres ,Israel ,Washington ,
× RELATED பாலஸ்தீனத்தை உறுப்பு நாடாக...